• போட்டியாளர்கள் 14 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருத்தல் வேண்டும்
 • போட்டியாளர் ஐபிசி தமிழ் நேயர்மன்ற உறுப்பினராக இருத்தல் வேண்டும்
 • போட்டிக்கான நுழைவுக்கட்டணமாக போட்டியாளர்களின் வதிவிடத்தின் அடிப்படையில் £100 அல்லதை €100 அல்லது CHF 150 அல்லது 1000 kr அல்லது CAD 150 அறவிடப்படும்.
 • போட்டியில் பயன்படுத்தப்படும் பாடல்கள், இசைக்கோப்புக்கள் ஒலிபரப்புத்தரத்தில் ஒலித்தெளிவுகொண்டதாக அமைந்திருத்தல் வேண்டும்.
 • போட்டியில் பயன்படுத்தப்படும் பாடல்கள், இசைக்கோப்புக்கள் ஒலிபரப்பு உரிமம் கிடைக்கப்பெற்றதாகவோ அல்லது காப்புரிமை அற்றதாகவோ இருத்தல் வேண்டும்.
 • இறுதிச்சுற்றான வர்ணம் உருப்படிச் சுற்றினைத்தவிர்ந்த அனைத்துச்சுற்றுக்களும் 6-7 நிமிடங்களுக்கு உட்பட்டதாக இருத்தல் வேண்டும்.
 • இறுதிச் சுற்றான வர்ணம் உருப்படிச்சுற்றானது 18-20 நிமிடங்களுக்கு உட்பட்டதாக இருத்தல் வேண்டும்.
 • போட்டியாளர்கள் அரை இறுதிப்போட்டி, இறுதி போட்டி ஆகியவற்றில் கலந்துகொள்ள தேவையான விசா பெற்ற, பெறக்கூடியவர்களாக இருத்தல் வேண்டும்.
 • அரை இறுதிப்போட்டி, இறுதி போட்டி ஆகியவற்றில் கலந்துகொள்ள போட்டியாளர்கள் தேவைக்கு ஏற்ப, போட்டி நடைபெறும் நாடுகளுக்கு பிரயாணம் செய்யக் கூடியவர்களாக இருத்தல் வேண்டும்.
 • போட்டியாளர்களின் ஆடை, ஆபரண அணிகலங்கள் தொடக்கம் அவர்களின் பிரயாண ஒழுங்குகள் வரை போட்டியாளர்களோ அல்லது அவர்களின் பெற்றோர்களோ பொறுப்பெடுத்தல் வேண்டும்.
 • நிகழ்ச்சி ஒளிப்பதிவு செய்தலுக்கும், அதன் ஒளிபரப்புக்கும் தேவைப்படும் கால அவகாசத்தினைக் கருத்தில் கொண்டு, சுற்றுக்களில் நடைபெறும் விடயங்கள், பெறப்படும் புள்ளிகள், தெரிவுசெய்யப்படும் போட்டியாளர்கள் போன்ற விடயங்கள் இரகசியம் காக்கப்படல் வேண்டும்.
 • நாட்டியதாரகை என முடிசூடப்பட்ட வெற்றியாளர், குறைந்தது 12 மாதங்களுக்கு தேவைகளின் அடிப்படையில், ஐபிசி தமிழின் சிறப்பு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளல் வேண்டும்.
 • நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது