ஆடற்போட்டியின் முதற்கட்டமாக பிரித்தானியா, பிரான்ஸ், ஜெர்மனி, சுவிஸ், டென்மார்க், நோர்வே, கொலண்ட் மற்றும் கனடா ஆகிய 8 நாடுகளில் இருந்து கிடைக்கப்பெறும் விண்ணப்பங்களில் திறமைகளின் அடிப்படையில் நாடுகள் ரீதியாக 16 போட்டியாளர்கள் தெரிவு செய்யப்பட்டு, பின்னர் அந்நாடுகளில் நடைபெறும் அரங்க நிகழ்சிகள் மூலம், இருவர் இரண்டாம் கட்டப்போட்டிக்குத்தெரிவு செய்யப்படுவர்.

பிரத்தியோகமாக அமைக்கப்பட்ட கலையகத்தில் தெரிவுசெய்யப்பட்ட16 போட்டியாளர்களும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும்வண்ணம் ஐந்து சுற்றுக்கள் போட்டியிடுவர். ஐந்து சுற்றுக்களின் இறுதியில், புள்ளிகளின் அடிப்படையில், ஐந்து போட்டியாளர்கள் நடுவரால் இறுதிச்சுற்றுக்குத் தெரிவு செய்யப்படுவர்.

இறுதிப்போட்டியின் இரு சுற்றுக்களைத் தொடர்ந்து திறமைகளின் அடிப்படையில் நடுவர்களால் ஒருவர் வெற்றியாளராகத் தெரிவுசெய்யப்பட்டு நாட்டியதாரகையாக முடிசூட்டப்படுவார்.