செயல்முறைத்தேர்வு / Audition

அனைத்து போட்டியாளர்களும் தங்கள் விண்ணப்பத்துடன் தங்கள் திறமைகளை வெளிக்காட்டும் வகையில் தங்களுக்கு பிடித்தமான உருப்படிகளை குறைந்தது 3 நிமிடமாவது நடனம்புரிந்து அதனை காணொளியாக பதிவேற்றம்செய்யவேண்டும். நாடுகள் ரீதியான போட்டியின் முதற்கட்டமாக விண்ணப்பத்துடன் பதிவேற்றப்பட்ட காணொளியின் மூலம் அவரவர் திறமைகளின் அடிப்படையில் 16 போட்டியளர்கள் நடுவர்களால் நாடுகள் ரீதியிலான அரங்க நிகழ்வுக்காகத் தெரிவுசெய்யப்படுவர்.

நாடுகள் ரீதியான சுற்று

நாடுகள் ரீதியாக நடைபெறும் அரங்கப்போட்டி நிகழ்ச்சியில் இரு சுற்றுக்கள் இடம்பெறும். இப்போட்டியில் மூன்று நடுவர்கள் தங்கள் மதிபெண் மூலம் இருவரை ஐரோப்பிய ரீதியிலான போட்டிக்குத் தெரிவு செய்வர்.

இரு சுற்றுக்களிலும் நடுவர்களால் அளிக்கப்பட்ட மொத்தப்புள்ளிகளின் அடிப்படையில் கூடுதற்புள்ளிகள் பெற்ற இரு போட்டியாளர்கள் அந்நாட்டின் வெற்றியாளர்களாக நடுவர்களால் தீர்மானிக்கப்பட்டு ஐரோப்பிய ரீதியாக நடைபெறும் நிகழ்வில் போட்டியிட தங்க நுழைவுச்சீட்டு வழங்கப்படும்.

அரை இறுதிச்சுற்று.

நாடுகள் ரீதியாக தெரிவுசெய்யப்பட்ட 16 போட்டியாளர்கள் பிரத்தியோகமாக அமைக்கப்பட்ட கலையகத்தினுள் நாட்டியதாரகை இறுதிச் சுற்றுக்கு தெரிவாகப் போட்டியிருவர்.

ஐந்து சுற்றுக்களிலும் நடுவர்களால் அளிக்கப்பட்ட புள்ளிகளின் அடிப்படையில் ஐந்து இறுதிச்சுற்றுக்கு நடுவர்களால் தெரிவுசெய்யப்படுவர்.

இறுதிச்சுற்று

நேரலையாக  நடைபெறும் இறுதிச்சுற்றில் தகுதியடைந்த ஐவரும் இரு சுற்றுக்களில் போட்டியிட்டு அவரவர் திறமைகளின் அடிப்படையில் நடுவர்களின் மதிப்பெண்களுக்கமைய ஒருவர் நாட்டியதாரகையாக முடிசூட்டப்படுவார்.

போட்டிக்கான விண்ணப்பம்

நாட்டியதாரகை என்னும் மகுடம் சூடி 1kg எடையுள்ள தங்கக்கிரீடம் சூடத்தயாரா ?

பிரமாண்டமிக்க நாட்டியப்போரில் நீங்களும் கலந்து உங்கள் திறமையினை சர்வதேச அரங்கில் நிலைநாட்டுங்கள்.
உங்கள் விண்ணப்பப்படிவங்களை இன்றே இணையம் மூலம் அனுப்பிவைப்பதன்மூலம் போட்டியில் உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பத்தினை உறுதிப்படுத்துங்கள்.
போட்டிக்கான விண்ணப்பம்