ஐரோப்பா மற்றும் கனடா ரீதியாக ஐபிசி தமிழால் நாடாத்தப்படும் மாபெரும் நாட்டியப்போர் – “நாட்டியதாரகை” நடனப்போட்டி நிகழ்ச்சியின் நாடுகள் ரீதியான சுற்றின் முதற்கட்டமாக பிரித்தானியாவில் கடந்த 04.02.2017 அன்று களம் அமைக்கப்பட்டது.
தமிழரின் அடையாளங்களான பாரம்பரியக்கலைகளில் ஒன்றான பரதநாட்டியத்தினை புலம்பெயர் நாடுகளில் பயில்பவர்களையும் பயிற்றுவிப்பவர்களையும் ஊக்கப்படுத்தி, உலக அரங்கில் அவர்களை இனம்காட்டி இனிவரும் சந்ததியினருக்கு கலையின் அவசியத்தினை, அழகினை, உயிரூட்டத்தினைப் பரப்பும் நோக்கோடு அமைக்கப்பட்ட களத்தில், பிரித்தானியா பரதநாட்டியத்தினை உரிமையுடன், பெருமையுடன், சிரத்தையுடன், நவரசத்துடன் புலம்பெயர்வாழ் உறவுகள் மூலம் களமேற்றியது.

முதலாவது, இரண்டாவது சந்ததியினருடன், இம்மாபெரும் கலையினைக் கற்றுத்தேர்ந்த பிற இனத்தவரும் தமது திறமைகளைக் களமேற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது தார்மீகக்கடமைகளைச் சீராகச்செய்துவரும் ஐபிசி தமிழ் என்னும் ஊடக விருட்சத்தின் மாபெரும் போட்டிநிகழ்ச்சியான “நாட்டியதாரகை” நடனப்போட்டி நிகழ்ச்சியில் வெற்றிபெற்று 1kg எடையுள்ள தங்கக்கிரீடத்தினை வெல்லப்போகும் போட்டியாளர்களுக்கான தேடல் அடுத்தகட்டமாக பிரான்ஸ் மண்ணில் எதிர்வரும் 25.02.2017 அன்று களமேறவிருப்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து ஏனைய ஐரோப்பா நாடுகளிலும் கனடாவிலும் நடைபெறவுள்ளது.

உலக அரங்கில் உங்கள் திறமைகளின் அடிப்படையில் 1kg எடையுள்ள தங்கக்கிரீடத்தினை வென்று நாட்டியதாரகை என்னும் மணிமகுடத்தினை வெல்ல நீங்கள் தயாரா?