ibctamilஉலகமெங்கும் படர்ந்திருக்கும் புலம் பெயர் தமிழர் மற்றும் தாயகம், தமிழகம் வாழ் தமிழர்க்கும் உறவுப்பாலமாக 1997ஆம் ஆண்டு ஜுன் அனைத்துலக ஒலிபரப்பு கூட்டுத்தாபனமாக ஐபிசி வானொலி பிரித்தானியாவை தளமாகக்கொண்டு செயற்படத் தொடங்கியது.

குறுகிய காலத்தில் பெருவளர்ச்சியைக் கண்ட ஒரு ஊடகமாக வானொலி செயற்பட்டுக்கொண்டிருக்கும்போது நம்மவர்களுக்கான தகவல் மற்றும் பொழுது போக்குக்களுக்குரிய ஒளிஊடகத்தின் தேவை உணரப்பட்டது. அதன் நிமித்தம் அடுத்த பரிமாணமாக 2015ஆம் ஆண்டு ஐபிசி தமிழ் தொலைக்காட்சி உருவாக்கியது. லண்டன் தமிழ் மீடியா என்ற தளத்தின் ஊடாக தொலைக்காட்சி, வானொலி, இணையம் என பரந்து செயற்படத்தொடங்கியுள்ளது ஐபிசி தமிழ்.

அதியுச்ச தொழிநுட்ப வசதிகளை உள்ளடக்கிய HD தரத்திலான ஒளி, ஒலி கலைக்கூடங்கள் பிரித்தானியா, இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் அமைக்கப்பட்டு ஐரோப்பா, இலங்கை, இந்தியா ஆகிய பகுதிகளில் இருந்தும் செய்திகள், தகவல்கள், எமது கலை மற்றும் விழுமியங்கள் சார் அம்சங்கள் மக்களுக்காக வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

பிரித்தானியாவை தலைமையகமாகக் கொண்டு செயற்பட்டுக் கொண்டிருக்கும் ஐபிசி தமிழ் ஊடகவலையமைப்பு தனது சேவைகளை ஐரோப்பியக் கண்டத்தோடு சேர்த்து தற்போது கனடாவிலும் விஸ்தரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.