nt-historyதமிழர்களின் அடையாளங்கள் மருவிவரும் காலப்பகுதியில், எமது அடையாளங்களில் பெரும் பங்குகளை வகிக்கும் எமது கலை வடிவங்களுக்கான அடிப்படை அங்கீகாரங்களை வழங்கி அதன் திறனாளிகளை ஊக்கப்படுத்துவன் மூலம் கலை வடிவங்களை தொடர்ச்சியாக பயிலவும், பயிற்றுவிக்கவும் மக்கள் மத்தியில் ஈர்ப்பை ஏற்படுத்தும் வகையில் ஐபிசி தமிழ் தனது தார்மீகக் கடமைகளை செய்துவருகின்றது.

 

அந்தவரிசையில் எமது பாரம்பரியக்கலைகளில் ஒன்றான பரதநாட்டியத்தினை மாபெரும் போட்டி நிகழ்ச்சிமூலம் மக்கள் மனங்களில் மீண்டும் சிம்மாசனமேற்றி திறனாளிகளை சர்வதேச அரங்கில் அவர்கள் திறைமைகளுக்கான அங்கீகாரத்தினை வழங்கி கெளரவிக்கும் நோக்கோடு ஐபிசி தமிழ் பெருமையுடன் அமைதிருக்கும் களமே நாட்டியதாரகை.

naatiyatharagai

 

ஐரோப்பா முதல் கனடா வரை சர்வதேச ரீதியில் நடைபெறும் இப்போட்டியின் வெற்றிநாயகி – சர்வதேச அரங்கில் “நாட்டியதாரகை” என்னும் மகுடம் சூடி 1kg எடையுள்ள தங்கக் கிரீடம் சூட்டப்பட்டு கெளரவிக்கப்படுவார். அத்துடன் அவரின் கலைவளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த அவரின் குரு உட்பட உறவினர்களும் சர்வதேச அரங்கில் கெளரவிக்கப்படுவார்.

போட்டிக்கான விண்ணப்பம்

நாட்டியதாரகை என்னும் மகுடம் சூடி 1kg எடையுள்ள தங்கக்கிரீடம் சூடத்தயாரா ?

பிரமாண்டமிக்க நாட்டியப்போரில் நீங்களும் கலந்து உங்கள் திறமையினை சர்வதேச அரங்கில் நிலைநாட்டுங்கள்
உங்கள் விண்ணப்பப்படிவங்களை இன்றே இணையம் மூலம் அனுப்பிவைப்பதன்மூலம் போட்டியில் உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பத்தினை உறுதிப்படுத்துங்கள்.
போட்டிக்கான விண்ணப்பம்